அநுராதபுரம் மாவட்டம், எப்பாவல – எந்கல சந்தியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைதுசெய்ய பொலிஸ் சார்பில் சில குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு வீட்டின் உரிமையாளரும் அவரது நண்பரும் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த சிலர் கூரிய ஆயுதங்களால் அவர்களைத் தாக்கினர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் 46 மற்றும் 31 வயதுகளையுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் மது பாவனை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment