அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தமது நிலைப்பாட்டை எதிர்வரும் 08 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.
கூட்டணியின் அரசியல் குழு, கொழும்பு நுகேகொடை செயலகத்தில் 08 ஆம் திகதி கூடவுள்ளது.
“நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும்.
அதேவேளை இவற்றை விட இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பக்க விளைவாக விகிதாசார தேர்தல் முறைமைக்கும், 13ம் திருத்தம் மூலமான மாகாணசபை முறைமைக்கும் உடனடியாகவோ, காலம் கழித்தோ வரக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அவதானத்தை கொண்டுள்ளது.” என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment