IMG20220601100516 2 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் மக்கள் ஏ – 9 வீதியை மறித்துப் போராட்டம்!

Share

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ – 9 வீதியை மறித்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று கிளிநொச்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள நிலையில் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தபோதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை.

இதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை ஏ – 9 வீதியின் குறுக்காக வைத்து வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிளிநொச்சிப் பொலிஸார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Crime
இலங்கை

கத்தியுடன் காவல் நிலையத்தினுள் புகுந்த நபர் – பரபரப்பு வாக்குமூலம

மாற்றுத்திறனாளியான தனது சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ...

Smartraveller
இலங்கை

இலங்கை பயணிகளுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாக்கு இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சுற்றுலாத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள்...

bus driver
இலங்கை

கடமை நேரத்தில் உயிரிழந்த சாரதி – யாழில் அதிர்ச்சி சம்பவம்.

நேற்று யாழில், புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ள தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர்...

கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...