gotabaya
அரசியல்இலங்கைசெய்திகள்

21வது திருத்தச் சட்டம்! – ஆளுங்கட்சிக்குள் மோதல்!!

Share

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் பல எம்.பிக்களும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் உணவு பஞ்சம் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.

அவ்வேளையில் 21 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னர், பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதார பிரச்சினை தீர வேண்டுமெனில், அரசியல் உறுதிப்பாடும் அவசியம். எனவே, இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. எதிர்வரும் வியாழன் அன்று, மொட்டு கட்சி எம்.பிக்கள், நிதி அமைச்சருடன், 21 தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளனர். அதன்பின்னரே கட்சியின் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...