image 1488947718 9cc2fd6c8b
இலங்கைசெய்திகள்

யாழில் 5,000 கொடுப்பனவு!

Share

ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வருமானம் குறைந்த மக்களுக்கு தற்பொழுது வழங்கப்படுகின்ற தொகையை விட மேலதிகமான தொகையைச் சேர்த்து தலா 5,000 ரூபா வழங்குவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 78,442 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும் 27 ஆயிரத்து 978 வறிய குடும்பங்களுமென மொத்தமாக 1,06,420 குடும்பங்கள் அந்த நன்மையைப் பெறும்.

இதற்கான ஏற்பாடுகளை சமுர்த்தி திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில் அந்த நிதி கிடைத்தவுடன் மே மற்றும் யூன் மாதங்களில் அந்த கொடுப்பனவு கிடைக்கும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 697329f046753
செய்திகள்உலகம்

ரஷ்யாவின் நிழல் உலகக் கப்பல் பிரான்ஸிடம் சிக்கியது! உக்ரைன் போருக்கு நிதி திரட்டும் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு!

சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவிற்கு நிதி திரட்டுவதாகக் கருதப்படும் ‘நிழல் உலகக் கப்பல் படையைச்’...

26 697352f20d41f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு கொடுத்த முன்னாள் இராணுவ வீரர் கைது! திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் பாடசாலை மாணவர்களுக்குச் சட்டவிரோத மதுபானமான ‘கசிப்பு’ அருந்தக் கொடுத்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற...

MediaFile 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வல்வெட்டித்துறையில் கழிவுநீரை பொது வாய்க்காலில் விட்டவருக்கு தண்டம்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் வீட்டு கழிவுநீரை மழைநீர் வழிந்தோடும் பொது வாய்க்காலுக்குள் சட்டவிரோதமாகத் திருப்பிவிட்ட ஒருவருக்கு...

5ec14a30 616d 11ef b970 9f202720b57a.png
செய்திகள்அரசியல்இலங்கை

இனி தீவிர அரசியலில் நான் இல்லை: மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) காலை கண்டிக்கு விஜயம் செய்து, மல்வத்து மற்றும்...