Medicines
இலங்கைசெய்திகள்

6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்!

Share

மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகின.

இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை என அடையாளம் காணப்படும்போது 99 வீதமானவை நோயளிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரமற்ற (quality fail) மருந்துகளுக்கான செலவினை வங்குநர்களிடமிருந்து அறிவிட்டுக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

ஔடதங்களின் உறுதித்தன்மை காணப்படும் வகையில், உரிய தரத்தில் அவற்றை களஞ்சியப்படுத்த முடிந்தளவு விரைவில் வசதிகளை ஏற்படுத்துமாறும் கோபா குழு விதப்புரை வழங்கியுள்ளது.
மருந்து வழங்கல் பிரிவுக்குச் சொந்தமான களஞ்சியங்களில் வெப்பநிலையை முறையாகப் பேணிவராமை மற்றும் மருத்துவ வழங்கல்கள் மத்திய ஓளடத களஞ்சியத்தினதும் வைத்தியசாலைகளினதும் நடைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளமையையும் குழு அவதானித்துள்ளது.

மருந்துகள் கிடைத்தவுடன் அவை தரமற்றவையென அடையாளம் காண்பதற்கான முறையியலொன்று காணப்படின் அதற்கான நட்டத்தினை வழங்குனர்களின் உத்தரவாதத் தொகையிலிருந்து அறவிட்டுக் கொள்ள முடியுமெனவும், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக 60 வகையான மருந்துகளின் தரத்தினைப் பரிசோதனை செய்ய முடிந்தால் இந்த நிலைமையை ஓரளவிற்கேனும் தவிர்த்துக் கொள்ள முடியும் என அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ வழங்கல் பிரிவானது தரமற்ற மருந்துகள் அல்லது மருத்துவ வழங்கல்களுக்கான செலவுகளை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அறவிடுவதற்குப் பதிலாக உரிய வழங்குநர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் செயலாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண கடந்த 20ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2021.08.04 தொடக்கம் 2021.11.19 வரையான காலப்பகுதியில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள் குறித்த விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...