இம்மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – கொள்ளுப்பிட்டி பெரஹர மாவத்தை மற்றும் பேர வாவிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நடைபாதையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்தார்.
குளியாப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் கடந்த 9ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தலை மற்றும் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்ய கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment