342846 1440x563 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகளை உடன் விடுவிக்குக!

Share

” வடக்கில் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகக் கைதிகளாக உள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.”

இவ்வாறு ‘தீவிர செயற்பாட்டு மைய கூட்டமைப்பு’ (Radical Centre) கோத்தாபய – ரணில் ஆட்சியை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

இன்று, முள்ளிவாய்க்காலில் தமிழர் இனப்படுகொலையை நினைவுகூர, வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தயாராகும் இவ்வேளையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து வகையான குற்றங்களுக்கும், மாறி மாறி நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசியல்வாதிகளின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அரசியல் செயல்பாட்டின் விளைவாக, இந்த நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களும் மிகவும் அடக்குமுறை மற்றும் வேதனையான வாழ்க்கையை அனுபவித்தனர். அதிலும் தமிழ் மக்களின் இன்னல்கள் இன்னும் அதிகம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போன தமது பிள்ளைகளை 13 வருடங்களுக்கு மேலாக அந்தத் தாய்மார்கள் தேடி வருகின்றனர். இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் போதும் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த தாய்மாரின் பிள்ளைகளை கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் பொறுப்பில் இருந்து தென்னிலங்கையில் போராட்டம் நடத்தும் நாம் தப்ப முடியாது.

யுத்தத்தின் இறுதிக் காலத்தில் காணாமல் போன தமது இரத்த உறவுகளின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி வடக்கு கிழக்கில் தாய்மார்கள் சுமார் 2000 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

காணாமல் போனோர் தொடர்பான அரசாங்க அலுவலகம் (OMP) மற்றும் பிற அறிக்கைகளின்படி, யுத்தம் முடிவடைந்த பின்னர் 1,642 பேர் அரசாங்க பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் 21,171 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் யுத்தத்தின் அவல நிலை குறித்து தெரிவிக்கையில், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டறிவதற்காக நீதிக்காக போராடி வந்த 115 பெற்றோர், தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று இறுதிவரை தெரியாமலே உயிர்பிரிந்துள்ளனர்.

அரச பாதுகாப்புப் பிரிவினரின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் தென் இலங்கையின் எந்தவித ஆதரவோ, சரியான உணவோ இன்றி, இலங்கை வரலாற்றில் மிக நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் தாய்மார்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் ‘தீவிர செயற்பாட்டு மையம், போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெறும் வரை பின்வாங்கக் கூடாது என்ற பாடத்தை வடக்குத் தாய்மாரை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று தெற்கில் போராடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறது.

இதுவரை காணாமல்போன தங்கள் அன்புக்குரியவர்களில் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனமை குறித்து காணாமல் போனோர் குறித்து தேடி அறியும் அலுவலகம் (OMP) குறித்து எங்களுக்கு ஒரு தவறான புரிதல் உள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தில் சிறிதும் திருப்தியடையாத ‘தீவிர செயற்பாட்டு மையம்’ இந்த நடவடிக்கை குற்றங்களை மூடிமறைக்கும் முயற்சியாகவே பார்க்கிறது.

தமது மக்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடி பல வருடங்களாக மனிதாபிமானமற்ற முறையில் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி வரும் ‘தீவிர செயற்பாட்டு மையம்’ அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்து, நேசக்கரத்தை வடக்கிற்கு நீட்டுமாறு கோருகிறோம்.

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகளை பழிவாங்க, பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை ‘தீவிர செயற்பாட்டு மையம்’ பலமுறை அவதானித்துள்ளது.

“சர்வதேச சமூகத்தின் பார்வையில் கூட நாட்டின் நன்மதிப்பைக் கெடுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து, அனைத்துக் குடிமக்களும் கண்ணியமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.” – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...