douglas devananda
அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கள மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தினாலே தீர்வு கிடைக்கும்! – கூறுகிறார் டக்ளஸ்

Share

தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். அதற்கு மதிப்பளிக்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெகரியங்கள் களையப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருகின்றது.

ஆனால் எத்தகைய பிரச்சினைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது என்பதை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றவர்கள் நாம்.

இதன் காரணமாக புலிகள் எம்மில் பலரை கொலை செய்திருக்கின்றார்கள். என்னை கொலை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனினும் தென்னிலங்கயைில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை உறுதியுடன் தெரிவித்து வந்துள்ளோம்.

அதனடிப்படையிலேயே எமது அரசியல் செயற்பாடுகளும், தென்னிலங்கை மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனான எமது உறவும் இருந்து வருகின்றது.

இந்த அணுகுமுறையினையே உங்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். வன்முறைகள் ஊடாக எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

எனவே, எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். எமது எதிர்காலத்தினையும் எமது தாய்நாட்டினையும் பாதுகாப்போம் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...