காலிமுகத்திடல் போராட்டத்தை
அரசியல்இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் போராட்டத்தை நிறுத்தப் படாதபாடுபடும் பொலிஸார்!

Share

கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலக முன்றலில் உள்ள தடையை அகற்றுமாறு பொலிஸார் முன்வைக்கவிருந்த கோரிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதி பிரதம நீதிவான் முன்னிலையில் முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்படவிருந்த கோரிக்கையை ஆராய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனாவெல இன்று விலகியதை அடுத்து, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சவேந்திர விக்கிரம தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் தயாரெனில், தாம் கோரிக்கையை முன்வைப்பதாக அரச சட்டத்தரணி சவேந்திர விக்ரம இன்று தெரிவித்தார்.

கோரிக்கையின் தன்மை தொடர்பில் திறந்த நீதிமன்றத்தில் எந்த விடயமும் முன்வைக்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் குழுவுடன் ஆஜரான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரச சட்டத்தரணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனாவெல, இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதில் இருந்து தான் விலகுகின்றார் எனவும், கோரிக்கை வேறு நீதிவானிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...