கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பாடசாலைக்குத் தீ வைத்த இரு மாணவர்கள் சிக்கினர்!

Share

பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்குத் தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை வடக்கு கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

12 மற்றும் 07 வயதுடைய குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளனர் என்று சி.சி.ரி.வி. காட்சிகளில் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாடசாலைச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு மாணவர்களும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...