நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு!

Share

ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்றையதினம் சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்ல, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, எரான் விக்கிரமரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் உள்ளடங்களான குழுவே பிரேரணைகளை ஒப்படைத்தன.

இப் பிரேரணைகள் நிறைவேறும் என எதிரணி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். கூடிய விரைவில் இவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
AL Exam Bad Weather Grade 05 Scholarship examination
இலங்கை

பரீட்சை காலத்து இடர்களை அறிவிப்பதற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள தொலைபேசி இலக்கங்கள்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக்...

Sri Pada 1
இலங்கை

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில்மண்மேடு சரிந்தது – காலநிலை சீரானதும் சீரமைப்பு பணிகள் இடம்பெறும்.

சிவனொளிபாத மலையின் உச்சியில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு...

குளவிக்கொட்டு
இலங்கை

குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 இற்கும் அதிகமான மாணவர்கள்.

  திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், குளவி கொட்டுக்கு...

நெடுந்தீவு கடற்பரப்பில்
இலங்கை

அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான நிலையில்,...