ரி 56 ரக துப்பாக்கியுடன் பெண் ஒருவர் சிக்கினார்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரி – 56 ரக துப்பாக்கியுடன் பெண் ஒருவர் சிக்கினார்!

Share

ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கஹட்டகஸ்திகிலிய, பலுகெடுவெவ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து ரி – 56 துப்பாக்கி, 3 மகசீன்கள் மற்றும் 184 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொகை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது எனவும், அவரைக் கைதுசெய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...