நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைவாசி உயர்வு, பொருட்கள் பற்றாக்குறை, உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம்கொடுத்து வருகின்றனர்,
நாட்டில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா ஏற்கனவே கடன் வழங்கியுள்து. இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்குமனிதாபிமான அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வழக்கை அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
குறித்த கடிதத்துக்கு இதுவரை பதில் எதுவும் வழங்கப்படாத நிலையில், மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தில், மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு தயாராகவுள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#India #SriLankaNews
Leave a comment