இந்தியாவில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது என தகவல்கள் வெளியாகுயுள்ளன.
இந்த இலையில், தமிழகத்திலும், தொற்று சடுதியாய அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்,
தமிழக அரசின் வழிகாட்டுதல்களையும், கட்டுப்பாடுகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும், அலட்சியமாக இருக்க வேண்டாம்.
தற்போதைய நிலைமையில் கட்டுப்பாடுகளை இருக்கமாக்க வேண்டிய தேவை கிடையாது. அதேவேளை மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டிய தேவையும் கிடையாது.
மக்கள் அலட்சியமில்லாது அவதானமாகவும் கட்டுப்பாடுகளுடனும் செயற்பட்டால் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
#IndiaNews
Leave a comment