அரசியல்
இடைக்கால அரசில் மொட்டு உறுப்பினரே பிரதமர்! – கம்மன்பில தெரிவிப்பு
” இடைக்கால சர்வக்கட்சி அரசில் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமர் பதவியை வகிப்பார். இது தொடர்பான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. புதிய பிரதமரின் பெயரை முன்கூட்டியே வெளியிட முடியாது.”
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதமர் மஹிந்த ராஜபக்ச கௌரவமாக வெளியேற வேண்டும். அவர் பதவி விலகினால், அமைச்சரவை தானாக கலைந்துவிடும். அதன்பின்னர் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் புதிய பிரதமர் தேர்வு இடம்பெறும். ஒருவரின் பெயர் தற்போது பரிசீலனையில் உள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிரணிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login