1 7
அரசியல்இலங்கைசெய்திகள்

கொலைகார கோட்டாவை விரட்டும் வரை ஓயாதீர்கள்! – மக்களிடம் சந்திரிகா வேண்டுகோள்

Share

“கொலைகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு விரட்டும்வரை மக்கள் ஓயாமல் போராட வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் 66ஆவது பிறந்தநாள் நினைவு தினத்தையொட்டி கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தனக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தைத் துப்பாக்கிமுனையில் அடக்க முயல்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ரம்புக்கனை சம்பவத்தின் ஊடாகத் தான் கொலைகாரன் என்பதை ஜனாதிபதி மீண்டும் நிரூபித்துள்ளார்.

‘கோ ஹோம் கோட்டா’ என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்களின் போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.

இது ஜனாதிபதிக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் சர்வதேச அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பொறுக்க முடியாத கோட்டாபய அரசு, மக்களை வன்முறைக்கு இழுத்து அவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை துப்பாக்கிமுனையில் அடக்க முயலும். எனவே, மக்கள் வன்முறையில் இறங்காமல் அமைதியாக – ஜனநாயக வழியில் தொடர்ந்து போராட வேண்டும். கொலைகாரக் கோட்டாபயவை வீட்டுக்கு விரட்டும்வரை மக்கள் ஓயாமல் போராட வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...