ஊர்காவற்துறை நீதிவான்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் விடுதலை!

Share

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை நீதிவான் ஜெ. கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதுடன் மீனவர்களின் படகொன்று அரசுடமையாக்கப்பட்டது.

இந்திய மீனவர்ளின் ஏனைய 2 படகுகள் தொடர்பான உரிமை கோரல் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களையும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமினூடாக நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் மூன்று சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களே நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி ஒரு படகுடன் 4 மீனவர்களும், மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஒரு படகுடன் 3 மீனவர்களும், ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி ஒரு படகுடன் 12 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...