WhatsApp Image 2022 04 19 at 4.05.41 AM
காணொலிகள்சினிமாசினிமாபொழுதுபோக்கு

வசூல் சாதனை படைக்கும் ‘KGF-2’

Share

நடிகர் யாஷ் நடிப்பில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான ‘KGF-2’ படம் உலகம் முழுதும் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், பாலிவூட்டில் மேலும் ஒரு சாதனை புரிந்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 13-ம் திகதி, உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியானது.

இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அர்ச்சனா ஜோயிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்த படம் , விஷுவல், சண்டைக் காட்சிகள், வசனங்கள், இசை என அனைத்திலும் மிரட்டலாக இருந்தது.

இந்தியா முழுவதும் வசூல் மழை பொழிந்துவருகிறது கேஜி எப்-2. முதன்முதலாக தென்னிந்தியாவை சேர்ந்த கன்னட மொழிப் படம் ஒன்று, அனைத்து மொழி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.

படம் வெளியான 4 நாட்களில் 500 கோடி ரூபாக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும், இந்தியில் 52 கோடி ரூபா வரை ‘கே.ஜி.எஃப். 2’ வசூலித்துள்ளது.

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’, ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படங்களுக்குப் பிறகு, வட இந்தியாவில் அதிகளவு ரசிகர்களை ‘கே.ஜி.எஃப். 2’ தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
rajini vijay
சினிமா

தளபதியினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரும்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. சிவராஜ்குமார்,...

Jana Nayagan vijay d 1
சினிமா

வசூல் வேட்டையினை ஆரம்பித்த ஜனநாயகன்.

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ஜூலை மாதம்...

Actor Sam Neill
சினிமா

பிரபல நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரை உலகம்.

சினிமா ரசிகர்கள் எல்லோருடைய மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்த ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று Jurassic Park....

s janaki
சினிமா

பாடகி எஸ்.ஜானகி காலமானார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.

பல ஆயிரம் பாடல்கள் பாடி தனது குரலால் ரசிகர்கள் எல்லோரையும் வசீகரித்தவர் எஸ்.ஜானகி. அவரது குரலுக்கு...