kar
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமே புதிய அமைச்சரவை! – பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

Share

” புதிய அமைச்சரவை என்பது மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமாகும். எனவே, புதிய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசு பதவி விலக வேண்டும், சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதே மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குகூட ஜனாதிபதி செவிமடுக்கவில்லை.

மக்கள் கோரிக்கையை ஏற்காமல், புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். இது தீர்வு அல்ல. மக்களை ஏமாற்றுவதற்கான துண்துடைப்பு வேலை.

அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை எம்மாலும் ஏற்கமுடியாது.

போராட்டக்காரர்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறான ஜனநாயக விரோதச் செயலில் அரசு ஈடுபடக்கூடாது.” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

6 31
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டவருக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும், தமது நாட்டவர்களுக்கு, பிரித்தானியா, நோய் அபாயத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட பயண எச்சரிக்கையை...