மஹிந்த நாமல்
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகமாட்டார் மஹிந்த! – நாமல் அறிவிப்பு

Share

“பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்சவே தொடர்ந்து நீடிப்பார். பிரதமர் பதவிக்கு நான் நியமிக்கப்படவுள்ளேன் என்று வெளியான தகவல் வதந்தியாகும்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவது குறித்து பரிசீலித்து வருகின்றார் எனவும், புதிய பிரதமராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நாமல் எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“விரைவில் பொருளாதார நிலைமைகள் மீளவும் கட்டமைக்கப்பட்டு அரசியல் நிலைமைகளும் சுமுகமாக்கப்படும். ஜனாதிபதி அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.

என்னைப் பொறுத்தவரையில் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்குக்கூட கிடையாது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...