கொள்ளையர்கள் கைவரிசை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!

Share

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் புரட்டப்பட்டுத் தகடுகள் களவாடப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் ஆலயம் பூட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் ஆலயத்துக்குள் புகுந்து மூல விக்கிரகத்தைப் புரட்டி அதன் கீழிருந்த தகடுகளைத் திருடிச் சென்றுள்ளதுடன் திருப்பணி உண்டியலையும் உடைத்துக் களவாடியுள்ளனர்.

இந்த ஆலயத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மஹா கும்பாபிசேஷம் இடம்பெற்ற நிலையில் குறித்த சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...