ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் காலி முகத்திடல் வளாகத்தில் தன்னெழுச்சி போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவானோர் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையிலேயே காலி முகத்திடலை அண்மித்த பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகம், போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment