அரசின் சாதாரண பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தி, எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் இன்று பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.
அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த பிரேரணையில் வலியுறுத்தப்படவுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. அரசுக்கு ஆதரவு வழங்கிய பல கட்சிகள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன. இந்நிலையிலேயே அரசின் சாதாரண பெரும்பான்மை (113 ஆசனங்கள்) சவாலுக்குட்படுத்தப்படவுள்ளன.
#SriLankaNews
Leave a comment