IMG01 10
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டைவிட்டு குடும்பத்துடன் தப்பியோடும் ராஜபக்சக்களின் சகாக்கள்!

Share

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும், ராஜபக்ச ஆட்சியாளர்களின் சகாவாகக் கருதப்பட்டவருமா நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் மாலைதீவுக்குச் சென்றுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அவர் விமான நிலையத்துக்கு வந்தபோது, விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் அனைத்து பாதுகாப்பு கமராக்கள் கொண்ட கமரா அமைப்பு செயலிழந்தது எனக் கூறப்படுகின்றது.

இன்று காலை 8.20 மணியளவில் UL102 என்ற விமானத்தில் அவர் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கமரா அமைப்பின் கோளாறு குறித்து விமான நிலையத்தின் பாதுகாப்புப் படையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...