1 e1648893777963
அரசியல்இலங்கைசெய்திகள்

சமூக ஊடகச் செயற்பாட்டாளர் திசர அனுருத்த பண்டார கைது!

Share

சமூக ஊடகச் செயற்பாட்டாளர் திசர அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு, முகத்துவார பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பளையைச் சேர்ந்த அவர், தண்டனைச் சட்டக் கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசுக்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமைக்காகவே திசர அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சமூக ஊடகச் செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டார, சட்டத்தரணிகளின் உதவியைப் பெறுவதற்கு இடமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்நிலையில், கொழும்பு 6ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...