கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். நகரில் சைக்கிள் திருடிய இளைஞர் சிக்கினார்!

Share

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் சைக்கிளைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேக்கத்துக்கிடமான முறையில் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞர் எடுத்துச் சென்றபோது , அப்பகுதியில் கடமையில் இருந்த யாழ். பொலிஸார் இளைஞரை மறித்து விசாரணைகளை முன்னெடுத்தபோது, சைக்கிளை இளைஞர் திருடிச் செல்வதை அறிந்து அவரைக் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட சைக்கிள்களில் வருவோர், வைத்தியசாலை சூழலில் தமது சைக்கிள்களை நிறுத்திவிட்டுச் செல்லும்போது அவை களவாடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அது தொடர்பில் பல முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் வைத்தியசாலை சூழலில் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதிய சைக்கிள் ஒன்றின் விலை தற்போது 35 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...