கோட்டா கூட்டமைப்பு நாளை நேரடிப் பேச்சு
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – கூட்டமைப்பு நேரடிப் பேச்சு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

புதிய அரசமைப்பு, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளன.

அத்துடன், புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெறவிருந்தது. எனினும், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய போராட்டத்தால் நாளை வரை இந்தப் பேச்சு பிற்போடப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...