கண்டி புறநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி, வத்தேகம, உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 மணிநேரம் இவர் வரிசையில் நின்றதாகவும், மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வரிசையில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
எனினும், வைத்தியசாலையில் சேர்க்க்படும்போது அவர் உயிரிழந்துவிட்டார் என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
நாட்டில் இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தி மக்களை வதைக்கும் அரசே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என கண்டி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
#SriLankaNews
Leave a comment