பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுவழி தேர்வை நோக்கி பயணிகள் நகர்வதை காணமுடிகின்றது.
தொழில் உட்பட இதர தேவைகளுக்காக இதுவரை காலமும் பஸ்களில் பயணித்தவர்கள்கூட, தற்போது ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும், இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் ஆலோசனை நடத்தி வருகின்றது.
போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒரு கிலோமீற்றர் வரையில் பயணம் மேற்கொள்பவர்கள் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளனர் எனவும், சிலர் சைக்கிள்களை பயன்படுத்திவருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ரயில் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment