WhatsApp Image 2022 03 09 at 1.35.03 PM
செய்திகள்அரசியல்இலங்கை

ஐ.நா வில் பெரும்பான்மை ஆதரவு இலங்கைக்கே! – ஜி.எல். பீரிஸ்

Share

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 45 நாடுகளுள் 31 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தன – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு முயற்சியாலேயே இந்த வெற்றி கிடைத்தது என்றும் கொழும்பில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கருத்து வெளியிட்டார்.

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இரண்டு தடவைகள் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஐந்து விடயங்களை மையப்படுத்தியதாகவே எனது உரை அமைந்தது.

ஐரோப்பாவில் தற்போது கடும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது, இந்நிலையில் எதற்கு இலங்கைமீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது , இலங்கையை இலக்கு வைத்து நிதி ஒதுக்கப்படுகின்றது.

வருடாந்தம் அறிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன என்று நான் கேள்விகளை எழுப்பினேன். பிற நாடுகளில் சம்பவங்கள் இடம்பெறவில்லையா, எனவே, ஒவ்வொரு நாடுகள் தொடர்பிலும் அறிக்கைகள் வந்தால் அது எங்கு சென்று நிற்கும்?

இலங்கையின் உள்ளக விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தலையிட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினேன். அது இலங்கையின் அரசமைப்பு மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அதிகார எல்லைக்கு முரணான விடயமாகும் என்பதையும் தெளிவுபடுத்தினேன்.” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...