IMG 20220306 WA0012 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனிலும் கையெழுத்து வேட்டை! – பெருமளவு மக்கள் அணிதிரள்வு

Share

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை ஹட்டனிலும் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்த விலைவாசி உயர்வுக்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஹட்டன் நகர மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தின் நிறைவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...