விமல் கம்மன்பில 2
செய்திகள்அரசியல்இலங்கை

இருவரினதும் பாதுகாப்பைக் குறைக்காதீர்! – மஹிந்த உத்தரவு

Share

“அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்குத் தொடர்ந்தும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்குச் சமமான பாதுகாப்பை வழங்குங்கள்.”

-இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பொதுவாக இரண்டு பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனினும், அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கான பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.

இந்நிலைமையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்திருந்தனர்.

அதற்கமைய அவர்களின் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் எனவும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...