2 Basil
செய்திகள்இலங்கை

பஷில் ஐனாதிபதி ஆவதை தடுத்தோம்! – அதனாலேயே பதவி நீக்கம் என்கிறார் விமல்

Share

” 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பஸில் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அதனை நாம் தடுத்துநிறுத்தினோம். அதனால்தான் அவர் எம்முடன் மோதினார். இன்று பதவி நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் கவலை அடையவில்லை.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கொழும்பில் இன்று (03) நடத்தி ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.

” ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பஸில் கோரினார். அதனை மஹிந்த வழங்கவில்லை. அதன்பின்னர் தனிக்கட்சியை உருவாக்கினார். 2019 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே அவர் செயற்பட்டார். அதற்கு நாம் இடமளிக்கவில்லை. மஹிந்த இல்லாவிட்டால், கோட்டாபய என திட்டவட்டமாக அறிவித்தோம். அதனால் பஸிலின் கனவு தகர்ந்தது.

அதன்பின்னர் கிழக்கு துறைமுக விவகாரம், யுகதனவி, 20 ஆவது திருத்தச்சட்டம் போன்றவற்றின்போதும் பஸிலின் முடிவுக்கு நாம் சவாலாக இருந்தோம்.

எங்களை வெளியேற்றாவிட்டால், அமைச்சரவைக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார். இதனால்தான் ஜனாதிபதி எம்மை நீக்கியுள்ளார். அதனால் நாம் கவலைப்படவில்லை. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் செயற்பட்டுள்ளோம்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...