Mahinda Rajapaksa in parliament
இலங்கைசெய்திகள்

உக்ரைன் ரஸ்யா யுத்தம் தொடர்பில் மகிந்தவின் நிலைப்பாடு!!

Share

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றுக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சுமார் ஆயிரத்து 500 இலங்கை மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்டு பிரதமர் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய பெலாரஸிலுள்ள சுமார் ஆயிரத்து அறுநூறு மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் பெலாரஸிற்கு அருகிலுள்ள இலங்கை தூதரகமான மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடி சில வாரங்கள் கல்விப் பணிகளை தாமதிப்பது குறித்தும் அவர்களுக்கு ரஷ்யாவிற்கான விசாவினை பெற்று இலங்கைக்கு செல்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...