VideoCapture 20220214 174434
செய்திகள்இலங்கை

அளவெட்டியில் வன்முறைக்கும்பல் அட்டகாசம்!!

Share

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி மேற்கு பகுதியில் இன்று அதிகாலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரினுடைய வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக்கும்பல் வீட்டின் முன் கதவு,தகரங்கள், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

இதனையடுத்து கதவுகள் மற்றும் மோட்டார் வாகனத்தின் எரிபொருள் தாங்கி என்பன பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

எனினும் வீட்டின் கதவை திறக்க முடியாத நிலையில் குறித்த வன்முறை குழு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளரான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நல்லையா புரட்சிதாசன் இன்று காலை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...