” ஜனநாயகத்துக்காக போராடிய – களமாடிய பண்புமிக்க அரசியல்வாதியே அமரர் மங்கள சமரவீர ” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அமரர். மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது. அவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு புகழாரம் சூட்டினார்.
” என்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர்தான் மங்கள சமரவீர. எனக்கு ஆதரவு தெரிவித்து ஹரின் பெர்னாண்டோ பதுளையில் முதலாவது கூட்டத்தை நடத்தினார். மாத்தறையில் மங்கள இரண்டாவது கூட்டத்தை நடத்தினார்.
மங்கள, எப்போதும் சரியான பக்கத்திலேயே நிற்பார். ஜனநாயகத்துக்காக துணிந்து போராடுவார். ஜனநாயகத்தை வெற்றிபெற வைக்க தன்னை அர்ப்பணித்து செயற்படுவார். சர்வதேசத்தின் ஆதரவை வென்றவர். ” – என்றார் சஜித்.
#SriLankaNews
Leave a comment