LakshmanKiriella
செய்திகள்அரசியல்இலங்கை

வருட முடிவுக்குள் மாகாணத் தேர்தல்! – எதிர்க்கட்சி வலியுறுத்து

Share

இவ்வருடத்துக்குள் கட்டாயம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதம கொறடாவான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்படும். எனவே, எமது நாட்டிலும் இவ்வருடத்தில் மாகாணசபை அல்லது உள்ளாட்சிமன்றத் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களின் நிலைப்பாட்டை அறிய இதுவே சிறந்த வழி.

தேர்தலை சந்திக்க தயார் என பஸில் ராஜபக்ச அறிவிப்பு விடுக்கின்றார். ஆனால் திருட்டுத்தனமாக தேர்தலை ஒத்திவைக்கின்றனர். தேர்தலொன்று நடத்தப்படுமானால் இந்த அரசு மண்கவ்வும். எனவே, இவ்வாண்டில் கட்டாயம் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....