5 1
செய்திகள்இந்தியாஇலங்கை

52 லட்சத்துக்கு படகுகள் ஏலம்!

Share

யாழ்ப்பாணம் காரைநகரில் வைத்து 135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விடப்பட்டதில் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

ஏலத்தின் நிறைவில் ஏலம் கேட்டவர்களால் மொத்தமாக 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மிகுதி பணமும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செலுத்தப்பட்டு படகுகள் அங்கிருந்து எடுத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் காரைநகர் கடற்படைத் தளத்தில் 135 படகுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தடுத்த வைத்திருந்த படகுகளே இன்று ஏலத்தில் விடப்பட்டன.

கொழும்பில் இருந்து வருகைதந்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளின் முன்னிலையில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலத்துக்கான பணிகள் யாவும் மாலை 2 மணி வரை இடம்பெற்றன..

இதன்போது 135 படகுகளும் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டன. இவற்றில் உச்சபட்சமாக ஓர் படகு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 7
இலங்கைசெய்திகள்

கஜ்ஜாவை நானே கொன்றேன்! விசாரணைகளில் உண்மைகளை வெளிப்படுத்திய பெக்கோ சமன்

தனது போதைப்பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியதற்காக அனுர விதானகமகே எனப்படும் கஜ்ஜாவைக் கொன்றதாக சந்தேக...

4 7
இலங்கைசெய்திகள்

பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் அநுரவின் அரசாங்கம் – சஜித் அணி கடும் விசனம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேறியவர்கள் இன்று, புதிய அரசமைப்பை உருவாக்குவதாகக்...

3 7
உலகம்செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட மலையேறிகள்!

கடும் பனிப்பொழிவுக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் திபெத்திய சரிவுகளில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட மலையேறுபவர்களை மீட்பதற்கான...

2 7
இலங்கைசெய்திகள்

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாது

தற்போதைய தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் இழைக்காது...