தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சேனாதிராஜாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வு முடிவுகளின்படி அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவை சேனாதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிடல் மூலமாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment