மதுபோதையில் அனாகரிகமாக நடந்துகொண்ட பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றனர் நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அனாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் பிக்குவை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் பிக்குவிடமிருந்து கஞ்சா பொதி ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிக்கு உள்ளிட்டவர்கள் பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்ட போது, காருக்குள்ளிருந்தும் மற்றுமொரு கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன், சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment