sajith 01 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.தையிட்டியில் சஜித் (படங்கள்)

Share

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றையதினம் யாழ்ப்பாணம் – தையிட்டியில் முன்பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் இன்று (11) காலை தையிட்டி கலாவல்லி முன்பள்ளியின் புதியக் கட்டடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்து வைத்துள்ளார்.

sajith 1

குறித்த கட்டடம் “றாகம” நிறுவனத்தின் அணுசரனை ஊடாக நோர்வே HETLAND பல்கலைக்கழக மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் கடந்த 2 ஆயிரத்து 20 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் மூன்றாம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

sajith 02 1

இதன்போது மாணவர்கள் சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமா சந்திரபிரகாஸ், மாவட்ட அமைப்பாளர் வ.பிரபாகரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...