9d809408 6c22 4221 9827 f84c6d1843d9
செய்திகள்அரசியல்இலங்கை

சீனாவில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை!!!

Share

சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தாம் முன்னுரிமை வழங்குவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ உறுதியளித்தார்.

இன்று (09) சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.

தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்கு சீனாவிற்கு வருகைத்தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வேங்க் யீ அவர்கள்,

இலங்கையின் மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் அங்கு வருகைத்தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு உடனடியான அறிவுறுத்தினார்.

சீனாவின் மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்த 400 மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 1200 இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுக்கு மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு முடியாது போயுள்ளது.

பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்தார்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....