ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்த அமைச்சு பொறுப்புகள் மற்றும் விடயதானங்கள் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது.
எஸ்.பி. திஸாநாயக்கவிடம் அரச மேல் மட்டத்திலிருந்து இது தொடர்பில் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்றையே எஸ்.பி. திஸாநாயக்க எதிர்ப்பார்க்கின்றெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews
Leave a comment