namal
செய்திகள்அரசியல்இலங்கை

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே சுசில் பதவி நீக்கம்! – நாமல்

Share

” ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அரசை விமர்சித்துள்ள ஏனையஅமைச்சர்கள் குறித்தும் எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் முன்னெடுக்கப்படும். அமைச்சரவை உறுப்பினர்கள் மாத்திரமல்ல, ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொவிட் 19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசு பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை ஏற்கின்றோம்.

எனவே, நாட்டு மக்களுக்கு நிவாரம் வழங்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படும்.

முதற்கட்டமாக அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு, இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள்மீதான வரி நீக்கம் உள்ளிட்ட பல நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. மக்கள் எதிர்ப்பார்த்த மாற்றம் விரைவில் நிறைவேறும்.

அதேவேளை, அரசு எடுக்கும் தீர்மானங்களில் குறைப்பாடுகள் காணப்படின், அதனை சுட்டிக்காட்டும் உரிமை ஆளுங்கட்சியினருக்கு இருக்கின்றது. அதற்கு பொருத்தமான இடங்களும் உள்ளன. அதைவிடுத்து கூட்டு பொறுப்பைமீறும் வகையில் செயற்படக்கூடாது.” – என்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...