மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருக்கோவிலில் உள்ள ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரே இவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சாகாமம் தாலிபோட்டாற்றில் வழமைபோல நேற்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் இருந்த முதலை குறித்த மீனவரைப் பிடித்து இழுத்துச் சென்று கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மண்டானை திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்தி ( 55 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment