Jaffna Police 02
ஏனையவைஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

விக்கிரகங்களைக் கடத்திய இருவருக்கு நேர்ந்த கதி!

Share

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களைக் கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு , மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கீரிமலை நல்லிணக்கபுரம் மற்றும் புத்தூர் நவக்கிரி பகுதியை சேர்ந்த இருவர் கடந்த 24ஆம் திகதி காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

Jaffna Police

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்.

கடந்த 09ஆம் திகதி முதல் 23ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், கொழும்புக்கு கடத்தி விற்பனை செய்யப்பட்ட சிலைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , கொழும்பில் விற்பனை செய்யப்பட்ட 20 சிலைகளை மீட்டு வந்தனர்.

Jaffna Police 01

இந்நிலையில் நேற்று (26) சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...