வவுனியாவில் கிணற்றில் நீராடச் சென்று உயிரிழந்த சிறுவனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா- கொக்குவெளிப் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், அருகில் உள்ள, கிணற்றில் குளிக்கச் சென்ற போது, தவறி வீழ்ந்து கிணற்று நீரினுள் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், கிராம மக்களின் முயற்சியால், கிணற்று நீர் வெளியில் இறைக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து, சிறுவனுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்காரணமாக, சிறுவனின் சடலத்தை, சுகாதார நடைமுறைகளைப் பேணி எரியூட்டுவதற்கு, சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment