இலங்கை தொடர்பில், கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தல் பொய் என்று கூற அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், பிரபல சர்வதேச நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தலை வெளியிட்டு வருகிறது. இதில் இலங்கை தொடர்பான தரப்படுத்தலையும் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தற்போதைய நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஜனவரி மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாகவும் அதற்குள் 500 மில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment