கத்ரினாவும், விக்கி கவுசலும் திருமணம் முடிந்த கையோடு குடியேறுவதற்கு மும்பை ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
பிரபல ஹிந்தி பட நடிகை கத்ரினா கைஃப்புக்கும், விக்கி கவுசலுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.
இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது. திருமணத்துக்கு 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் இவர்களது திருமணம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருமண நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு செல்லும் பாதையை மூடிவிட்டதாக கத்ரினா மற்றும் விக்கி கவுசல் மீது சட்ட ஆணையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கத்ரினாவும், விக்கி கவுசலும் திருமணம் முடிந்த கையோடு குடியேற மும்பை ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
வீட்டின் மாத வாடகை ரூ.8 லட்சம் என்றும், அதேபோல இந்த வீட்டில் 5 வருடம் தங்குவதற்காக முற்பணமாக ரூ.1.75 கோடி கொடுத்துள்ளனர் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.
#CinemaNews
Leave a comment